எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியற் பெயர் கொண்டது. இது தேசிக்காய், தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது உண்டு. இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.

எலுமிச்சம் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
இது இந்தியா, வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும், இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. இது முதலில் பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் பின்னர் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இஸ்லாமியப் பூங்காக்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் இது அரபு உலகிலும், நடுநிலக்கடல் பகுதிகளிலும் இது பரவியிருந்தது.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.

உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். .உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது.

காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண் ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சல் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும். வாயுவை அகற்றும் பசியை உண்டாக்கும்
விரல் சுற்றிக்கு உதவும், நீரிலும் , காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “புளோபிளேன்“ என்ற சத்தில் உள்ளது.
தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும்.
வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும். எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது. ர‌த்த அழு‌த்த‌ம் குறை‌ந்த தலை‌ச் சு‌ற்ற‌ல் இ‌ரு‌க்கு‌ம்போது எலு‌மி‌ச்சை சாறை‌க் குடி‌த்தா‌ல் உடனடியாக உ‌ங்களது ர‌த்த அழு‌த்த‌ம் சம‌நிலையை அடையு‌ம்.

மேலு‌ம், எலு‌மி‌ச்சை சாறு உட‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி‌க்கு‌ம் ‌மிகு‌ந்த பய‌ன்தரு‌ம் ஒரு பானமாகு‌ம்.
வ‌யி‌ற்‌றி‌ல் பு‌ண் இரு‌ப்பவ‌ர்‌க‌ள் எலு‌மி‌ச்சை சாறை அ‌திக‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள கூடாது. எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.

இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்றுகண்டுபிடித்துள்ளதாகவும் பரிசோதனைச்சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்றும
எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் அவர் கூறியதாக ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் தெரிகிறது
சில கோயில்களில் ஸ்தல விருஷமாகவும் எலுமிச்சை மரம் இருக்கிறது.

எலுமிச்சை உண்மையில் ஆத்மாவின் பிரபஞ்ச சக்தியை சேமிக்கும் ஒரு சிறிய storage battery ஆக விளங்குகிறது .சிறிது சேரம் ஒரு எலுமிச்சையை கையில் வைத்து பிரார்த்தனை செய்து ஒரு நோய் வாய் பட்டவரிடம் தந்து பாருங்கள். அவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். எலுமிச்சை இன்னும் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு கனி .
Posted by akbar ali Labels:

0 comments: