ஆடா தொடை ஒவ்வரு கிராமத்தின் வெற்றிடகளில் தானாக முளைக்கும் ஒரு அரிய மூலிகை செடி .வேர் தண்டு இல்லை பூ கனி அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. ஆடத்தொடை மூன்று தோஷங்களில் முக்கியமான கபத்தை நீக்கவல்லது. கபம் இருந்தால் மூச்சு சீராக இராது .மூச்சு சரி இல்லையெனில் செய்யும் காரியங்கள் சீராக இராது. ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு

நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும்.

இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.
ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், . சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். .
ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் (மேலேதான் )வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும். .
Posted by akbar ali Labels:

0 comments: